இருப்பு-லேபிள்.

நிலவு வெறித்துக் கிடக்கிறது.
நிலைத்த பொழுதும் அதற்கு இல்லை
நீலம் போர்த்த திசையில் வெறித்துக்கிடக்கும்
உயிரும் ஒட்ட வெட்டப்பட்ட தலையைத் தேடி

உயிருண்டு விலத்தும் காலம்
வெழுத்க்கட்டும் வளியில்
உதிர்த்துவிடும் உடலம்
எந்தப் புள்ளியில் எடுத்து வைக்கிறது உன்னை?

பட்டதன் தொடரில்
பாழ்பட்ட இருப்பு ஒட்டமுனையும்
லேபிள்கள் எத்தனை நாமத்தோடு...

யாருக்கு வேண்டும் உனது சுய புலம்பல்?

மக்களைச் சொல்லிய
விளம்பரம் வீழ்ந்து வீங்கும் நிலைமறுப்பில்
நீ-நான்...
எல்லாம் சோதனைக் காலத்தின் புள்ளில்
தொடர் ஆரம்பமாகத் திசை வெறுத்து
கட்டாந்தரை வழி பாதாளம் புகுக.

தியாகினி.

Labels: ,

தோழிகளோடு அன்று..

புதிய வானம்.புதிய தெருக்கள்.புதிய மொழி.எல்லாம் எமக்குள் ஒன்றாய்க் குழப்பிக்கொண்டிருந் தது அன்று. நிருபா,பிராங்பேர்ட் ரஞ்சி,மல்லிகா அன்ரி,தேவிகா அக்கா எனச் சொந்தங்கள்.நாங்கள் புதிய குரலாக எமக்காகக் குரல் கொண்டபோது "நமது குரல் ஊதா சக்தி என மலர தயாவும் தோழியானாள்.இன்று எல்லாம் சுருங்கி இருக்கிறது.இராசேஸ் அக்காவின்ர மூச்சேத்தான் எங்கேயும் கேட்குது.

லெச்சுமி அக்கா இருந்து இருந்து எழுதுவது தெரியுது.உமா என்ன ஆனாள்.அம்மா(மல்லிகா அன்ரி)செத்தபின் குடும்பத்தோட மட்டும் வாழும் பொண்ணாக...

எங்களைப் பற்றி எவருக்கு அக்கறை?

நாங்கள் தொலைத்த வாழ்வு,ஈழவிடுதலையும் எண்டுதான் வரலாற்றில பதியவேணும்.எல்லாக் காலத்திலையும் செத்துப்போனவள் பெண்.
அந்தப் பெண் வெளிப்படையாகப் பேசினாத்தான் உண்மை முழுமை பெறும்.
போராட்டம் பற்றியும்,அதில பெண் பங்கு பற்றியும்,புலத்தில இருந்தவை புரட்சி பேசி ஊரை உலகத்துக்கு வித்ததையும்,இப்ப வித்துப்போட்டுத் திரும்ப புரட்சி பேசிகொண்டு எல்லாரையும் மேய்ஞ்சுகொண்டு நிப்பதையும் பேச வேணும்.தோழமை எண்டுறவை யாருக்கோ தூசு தட்டுகினம்.தமிழீழ விடுலையெண்டும்,பெண்விடுதலை,புரட்சி எண்டும்.என்னமோ தெரியாது... எல்லாரும் முண்டியடிச்சுத் திரியினம்.உண்மை தெரிஞ்சதைச் சொல்ல வேணும்.பொறுத்திருங்கோ சொல்லுறன்.

தியாகினி

Labels:

பெண் விடுதலை செய்யட்டாம்!

பேசு.

எங்களுக்குக்
கொண்டையில்
பூவைத்தவர்கள் தோழர்கள் ஆனார்களாம்
அவர்களையும் கேட்டு
பெண் விடுதலை செய்யட்டாம்.

என்னுடைய பெண்மை
இவர்களுக்குப் புரட்சியாம்.
இன்னும்
"கற்பழிப்பு" வகுப்பெடுக்க
பலர்...
புரட்சிக்குள்ள பெண் விடுதலை உண்டாம்!
என்னத்தைச் சொல்ல?

பேசு.
உனது பெண்மையை புரட்சிக்கு
தியாகமாக்கச் சொல்லும் தோழர்கள்
பெண்விடுதலை பேசுவதை நிறுத்தப் பேசு.

தியாகினி

Labels:

ஹாய் பெரியோரே!

எல்லோரும் நலமா?

ஹாய் பெரியோரே,இந்த வலைக் குறிப்புக் கு நான் புதியவள்.ஆனால் தளத்திலும்,புலத்திலும் நான் அறியப்பட்டவள்.
விடுதலைப் போரிலும்ஈபின் பெண்கள் சந்திப்பு,குரலெனப் பரவலாகப் பதியப்பட்டவள்.
வலை பதிந்துவரும் பல தோழிகள்-தோழர்கள் என்னை வரவேற்றபோது எதுவுமே தெரியாத இன்டர்நெட் தொழில்நுட்பத்தோடுதான் உங்களோடு இணைய வருகிறேன்.

இந்த தளத்தில என்னை எழுதச் சொல்லும் தோழிகளுக்கும்,நண்பர்களுக்கும்.நன்றி.

குறிப்பாகத் தோழி ஜெபாவுக்கும்,கௌரிக்கும் நன்றி சொல்ல வேண்டும்.இந்த இன்டர் நெட்டில் முன்பே எழுதிவரும் தோழர்கள் எனக்கு வழிகாட்டியாக முடியும்.அவர்களுள்தோழர்கள் பலர்.குறிப்பாக செந்தில் குமரனுக்கு நன்றி சொல்வேன்.எனக்கு,தோழி இராஸேஸ்வரி பாலா அவரின் விடாத துணிச்சல் முன் உதாரணம்.

அவரை எண்ணும்போது பயம் விட்டுப் போய்விட்டது.

தொடர்ந்து எழுதுவேன்.அனுபவங்கள் பல.அது,புலத்திலும் தளத்தில் போராடியதும்,எழுதியதும் என்று...

இன்று "எமது குரல்"வெளிவரவேண்டும்.

ஈழப் போராட்டத்தில் ஆண்சார் அனுபவங்களும்,அவைகளின் வீரப்பிரதாபங்களுமே பரவலாகப் பேசப்படுகிறது.எமது இருப்பு எவராலும் பேசப்படவில்லை.இதுபற்றி எழுதுவது என் நோக்கம்.எங்கள் விடுதலைப் போராட்டத்தின் உள்ளே நாம் இருந்தோம்.அதை நசித்தவர்களும் எமக்குள்ளேதான் இருந்தவை.

இப்போதும் புலத்தில் புரட்சி என்பவர்களும் அதில துணையோடு இருந்தவையள்.நாங்களும் பேசவேண்டும்.
பேசுவேன்.பெண்கள் சந்திப்பில் இதுபற்றி விவாதிப்போம்.இப்போது நான் வருகிறேன்.இனியும் பலர் வருவினம்.இப்போதைக்கு நன்றி.

மீண்டும் சந்திக்கிறேன்,
தியாகினி.

Labels: